என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![காரமடை வனத்தில் சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற 3 பேர் கைது காரமடை வனத்தில் சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற 3 பேர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/09/16/1762906-arrest.gif)
X
காரமடை வனத்தில் சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற 3 பேர் கைது
By
மாலை மலர்16 Sept 2022 3:51 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- தப்பியோடிய முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டூர் அன்சூர் மோரிப்பாளையம் பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த பகுதியில் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் குண்டூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (35), வீரையன்(எ) காளிமுத்து, ஆனந்தகுமார் (42), சொரண்டி பகுதியை சேர்ந்த சஞ்சித் (21) ஆகிய 4 பேரும் 15 சந்தன மரங்களை வெட்டி செதுக்கி கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வீரையன்(எ) காளிமுத்து, சஞ்சித், ஆனந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து சந்தன மரத்தையும் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
Next Story
×
X