என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து காவலாளியை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
    X

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து காவலாளியை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

    • சுடலைகுட்டி பொதுமக்கள் நோயாளிகள் வந்து செல்லக்கூடிய இடம். இங்கு வேகமாக செல்லாமா என கேட்டார்.
    • இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் சுடலைகுட்டி (வயது 59).

    இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சுடலைகுட்டி பணியில் இருந்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரிக்குள் 3 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கீழே விழுந்தனர்.

    இதனை பார்த்த காவலாளி அந்த வாலிபர்களின் அருகே சென்று பொதுமக்கள் நோயாளிகள் வந்து செல்லக்கூடிய இடம். இங்கு வேகமாக செல்லாமா என கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த 3 வாலிபர்களும் சேர்ந்து காவலாளி சுடலை குட்டியை தகாத வார்த்தைகளால் பேசி ஹெல்மெட்டால் தாக்கினர்.

    பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த காவலாளியை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காலாளியை தாக்கி சிவகங்கையை சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேஸ்வரன் (27), சுகுமார் (29), பாலமுருகன் (27) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×