search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கதண்டு கடித்து 30 பேர் காயம்; ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    X

    காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கதண்டு கடித்து 30 பேர் காயம்; ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    • கிராமமக்கள் 10 பேரை மரத்தில் இருந்த கதண்டு பூச்சிகள் கடித்துவிட்டன.
    • மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    சுவாமிமலை:

    திருவிடைமருதூர் அடுத்த பந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமாட்சிபுரத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். நாள்தோறும் அவர்கள் காமாட்சிபுரத்தில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம்.

    அதன்படி, இன்று வழக்கம்போல் பள்ளிக்கு பந்தநல்லூர் சாலையில் குடோன் அருகே உள்ளம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது சுமார் 20 மாணவ- மாணவிகள் மற்றும் அவ்வழியாக சென்ற கிராமமக்கள் 10 பேரை மரத்தில் இருந்த கதண்டு பூச்சிகள் கடித்துவிட்டன.

    இதில் காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோணலபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×