என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாக் ஜலசந்தி கடலில் விடப்பட்ட 3.2 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள்
- பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடும் பணி.
- பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னர் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளன.
பேராவூரணி:
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையான கடல் வளத்தை புதுப்பிக்கவும், இறால் உற்பத்தியை அதிகரிக்கவும் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்–படுவதோடு நீடித்து இறால் வளத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வழிவகை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், ' தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து கடலில் விடுதல்' என்ற திட்டத்தை மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் ரூ.168.948 லட்சம் மதிப்பீட்டில், 200 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை, தமிழ்நாட்டின் கடல் பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி பகுதிகளில் விட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி பாக் ஜலசந்தி கடற்பகுதியான, தஞ்சாவூர் மாவட்டம், மனோராவில் 3.2 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், கடல்பகுதியில் விடப்பட்டன.
இந்தாண்டு இதுவரை 22.64 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னர் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், மாவட்ட வனஅலுவலர் அகில்தம்பி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜுதீன், ஓம்கார் பவுண்டேஷன் முனைவர் பாலாஜி, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் தமிழ்மணி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு, நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் டாக்டர் ஜான்சன், டாக்டர் சக்திவேல் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்