என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில்  மது பதுக்கி விற்ற 35 பேர் கைது
    X

    நெல்லை மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 35 பேர் கைது

    • கடந்த 2 நாட்களாக போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
    • அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனையில் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து 581 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×