என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை பெருமாள்புரத்தில் பெண் அதிகாரி வீட்டில் 120 பவுன் நகை கொள்ளையில் 4 பேருக்கு தொடர்பு
- மர்மநபர்கள் அவரது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
- சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் 4 பேர் சேர்ந்து வீட்டின் பின்கதவை உடைப்பது தெரிய வந்தது.
நெல்லை:
பாளை பெருமாள்புரம் கனராபேங்க் காலனியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்.
120 பவுன் நகை கொள்ளை
இவரது மனைவி தேவி (வயது 58) நெடுஞ் சாலைத் துறையில் உதவி பொறியா ளராக பணியாற்றி வருகி றார். தேவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார்.
இந்நிலையில் மர்மநபர் கள் அவரது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுைழந்து, பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
சி.சி.டி.வி. ஆய்வு
இதுகுறித்து தேவி அளித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் 4 பேர் சேர்ந்து வீட்டின் பின்கதவை உடைப்பது தெரிய வந்தது.
5 தனிப்படைகள் அமைப்பு
ஆனால் அந்த 4 பேரின் உருவங்களும் தெளிவாக தெரியவில்லை. எனினும் கிடைத்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கொள்ளையர்களை பிடிப்பதற்காக உதவி கமிஷனர் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசார ணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.






