search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் 44 ஆயிரம் மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.
    • சேலம் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 22 ஆயிரத்தது 599 மாணவர்கள் 21 ஆயிரத்து 965 மாணவிகள் என மொத்தம் 44 ஆயிரத்து 564 பேர் எழுதினர்.

    சேலம்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.

    சேலம் மாவட்டம்

    சேலம் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 22 ஆயிரத்தது 599 மாணவர்கள் 21 ஆயிரத்து 965 மாணவிகள் என மொத்தம் 44 ஆயிரத்து 564 பேர் எழுதினர்.

    மாற்று திறனாளி மாணவ-மாணவிகள் 28 பேர் பங்கேற்க உள்ளனர். அரசு விதிகளின் படி தேர்வு எழுத உரிய சலுகை கள் வழங்கப்பட்டிருந்தன. பொது தேர்வு பணியில் 70 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 71 வழித்தட அலுவலர்கள் , 344 முதன்தமை கண்காணிப்பா ளர்கள், 344 துறை அலுவலர்கள் 5 ஆயிரத்து 859 அறை கண்காணிப்பா ளர்கள் சொல்வதை எழுதுபவர்கள் 844 பேர், 490 நிலையான படையினர், 579 ஆசிரியரல்லா பணி யாளர்கள் நியமனம் செய்ய பட்டு கண்காணித்த னர்.

    சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவ்அர் கூறினார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×