search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி:  188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட பலூன்கள்
    X

    188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட பலூன்களை கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் பறக்கவிட்டபோது எடுத்தபடம்.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: 188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட பலூன்கள்

    • தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில் ஒலிம்பியாட் கோலம் வரையப்பட்டது. மேலும் சிலம்பம், வில்வித்தை போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 4 நபர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலைகளையும், 19 நபர்களுக்கு தலா ரூ.1,000-க்கான வங்கி வரைவோலைகளையும் கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசாக வழங்கினார்.

    செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளும் 188 நாடுகளை குறிக்கும் வகையில், 188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட, ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களை கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவிகள் பறக்க விட்டனர்.மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழாவிற்கு வருகை தந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர் ஒலிம்பியாட் சின்னம் அச்சிட்ட தொப்பிகள் அணிந்து வந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு–வலர் கதிரேசன், உதவி கலெக்டர் மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, செஸ் சங்கத்தினர், பயிற்சி–யாளர்கள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×