என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
45 மருத்துவ குழுக்கள் தீவிர கண்காணிப்பு பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிக்கை
- கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.
- பண்ணைகளில் உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதையொட்டிநாமக்கல் மாவட்டத்தில் உரிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலி ணயுறுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணையாளர்களும் பண்ணையின் நுழைவு வாயிலில் சிறிய தொட்டியை அமைத்து அதில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி கலவை கலைந்து வைக்க வேண்டும். பண்ணைக்குள் செல்பவர்களும் வெளியே வருபவர்களும் கிருமி நாசினையில் கால்களை சுத்தம் செய்த பிறகு செல்ல வேண்டும். பண்ணைகளில் உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட 45 அதிவிரைவு படை குழுக்கள் அமைக்கப்பட்டு கோழிப்பண்ணைகளை தொடர்ந்து கண்காணித்து வர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கோழிப்பண்ணைக்குள் நுழையும் மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய கோழி பண்ணை யாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கோழி பண்ணை களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறை யாக கடைபிடிக்கவும் வழக்கத்திற்கு மாறாக பண்ணைகளில் கோழிகள் இறப்பு ஏற்பட்டால் உடனடி யாக கால்நடை பராமரிப்பு துறைக்கு கோழிப்பண்ணை யாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
கோழி பண்ணைகளில் உயிரியல் பாதுகாப்பு முறைகள் கடைபிடிப்பதை உறுதி செய்யவும், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தேவை யான நச்சுக்கொள்ளி மற்றும் மருந்துகள், உபகரணங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளதால் பொதுமக்கள் இந்த நோய் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்