என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் இளம் பெண்ணிடம் 4.5 பவுன் தங்க செயின் பறிப்பு: மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
- ரூபசேனா காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்.
- 4.5 பவுன் தங்கச் செயினையும், ரூ.5 ஆயிரம் வைத்திருந்த கைப்பையினையும் பறித்து சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரி செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபசேனா (வயது 38). இவர் திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். இவர் வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி கீழே இறங்கினார். அப்போது வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ரூபசேனாவின் கழுத்தில் இருந்த 4.5 பவுன் தங்கச் செயினையும், ரூ.5 ஆயிரம் வைத்திருந்த கைப்பையினையும் பறித்து சென்றனர். இது தொடர்பாக ரூபசேனா அளித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நகைபறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






