என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதை பொருள் விற்ற 5 பேர் கைது
போதை பொருள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ் குமாரபாளையம் நகரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் குமாரபாளையம் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து நகரின் அனைத்து பகுதியிலும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில், ஹான்ஸ் பதுக்கி வைத்த கே.ஒ.என். தியேட்டர் அருகே நாகராஜ் (வயது 63), ஆலங்காட்டுவலசு பகுதியில் சுப்ரமணி ( 44), ஓலைப்பாளையம் பகுதியில் ரத்தினசாமி, (56), பூபதி (36), பெராந்தர்காடு பகுதியில் ராஜேந்திரன் (53), ஆகிய 5 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து 32 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
Next Story






