என் மலர்
உள்ளூர் செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருவாலி, நாராயணபுரம்,மங்கைமடம், புதுப்பட்டினம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேரில்பா ர்வையிட்டு பாதிப்பு குறித்து விசாயிகளிடம் கேட்டறிந்தார்.
எடமணல், வேட்டங்குடி, அகர வட்டாரம், புதுப் பட்டினம் ஆகிய பகுதிகளில் கனமழை பாதிப்பை பார்வையிட்டு புதுப்பட்டினத்தில் 300 குடும்பங்களுக்கு, அரிசி , சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,சீர்காழி பகுதியில் பெய்த44 சென்டிமீ ட்டர் கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவசர கால நிவாரணம் வழங்க வேண்டும்.
தொடர் மழையால் வீடுகள், மீனவர்கள், இரால் குட்டைகள் அழிவு ஏற்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரண தொகை வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும்.
நியாய விலை கடை மூலம் பொது மக்களுக்கு பருப்பு,சர்க்கரை,கோதுமை இலவசமாக பொருட்கள் வழங்க வேண்டும்.
பழையார் துறைமுகத்தில் 300 விசைப்படைகள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் முடங்கியு ள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்டத் தலைவர் சங்கர்,மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.