என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் தடையை மீறி மதுபானம் விற்ற 50 பேர் கைது
- மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
- 581 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோைவ,
குடியரசு தினவிழாவையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை மீறி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கோவை புறநகர் பகுதிகளான பெரிய நாயக்கன்பாளையம் சப்-டிவிசனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 122 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல பேரூர் சப்- டிவிசனில் 10 பேர் கைது செய்யப்பட்டு 52 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கருமத்தம்பட்டி சப்- டிவிசனில் 5 பேர் கைது செய்யப்பட்டு 135 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி சப்- டிவிசனில் 11 பேர் கைது செய்யப்பட்டு 171 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வால்பாறை சப்- டிவிசனில் 3 பேர் கைது செய்யப்பட்டு 19 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் சப்- டிவிசனில் 3 பேர் கைது செய்யப்பட்டு, 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புறநகரில் மொத்தமாக நேற்று ஒரே நாளில் 42 பேர் கைது செய்யப்பட்டு, 517 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாநகரில் காட்டூர், சாய்பாபா காலனி, வைசியாள் வீதி, குனியமுத்தூர், லங்கா கார்னர், கண்ணப்பன் நகர், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 70 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தமாக கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தடையை மீறி மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 581 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.