search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    56-வது தேசிய நூலக வார விழா புத்தகம் ஒன்றே தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும்  விழுப்புரம் கலெக்டர் பழனி பேச்சு
    X

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு விழுப்புரம் கலெக்டர் பழனி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசினை வழங்கியபோது எடுத்தப்படம்.

    56-வது தேசிய நூலக வார விழா புத்தகம் ஒன்றே தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் விழுப்புரம் கலெக்டர் பழனி பேச்சு

    மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் புத்தகம் வாசி க்கும் பழக்கத்தினை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட நூலகத்தின் சார்பில் 56-வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார்விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி பேசுகையில், நூலக வார விழாவில் அதிகப்ப டியான மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்கள் வாசிப்பு திறனும் மேம்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை எழுதுதல் போன்ற பல்வேறு போட்டிகள் விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்த அரசு பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவர்க ளிடையே நடத்தப்பட்டது.

    மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் புத்தகம் வாசி க்கும் பழக்கத்தினை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும். ஏனென்றால், புத்தகம் ஒன்றே தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் என்பதால் ஒவ்வொருவரும் கட்டாயம் நூலகத்திற்கு சென்று வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட மைய நூலகத்திற்கு சாலை வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி அமைக்க விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ள ப்படும். மேலும், நூலகத்திற்கு மாணவ மாணவி யர்கள் டிஜிட்டல் முறையான கணினி நூலகம் அமைத்திடும் வகையில் தன்னார்வலர்கள் மூலம் அமைத்திட உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார். 2-ம் கருவறை நூலகம், வாசித்தேன் வளர்ந்தேன், மேல்நிலை வாழ்வுக்கு உயர்வு தருவது வாசிப்பு என்ற தலைப்புகளில் நடந்த கட்டுரை போட்டி, பசுமை இந்தியா கனவு இந்தியா என்ற துலைப்பில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்பட்டதுஇதில் கூடுதல் கலெக்டர் ஜெய் நாராயணன், விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செ ல்வி பிரபு, விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட மைய நூலகர் இளஞ்செழியன், நூலகர் வேல்முருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×