search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கலெக்டர் அலுவகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி
    X

    தீக்குளிக்க முயன்றவர்களை படத்தில் காணலாம்.

    சேலம் கலெக்டர் அலுவகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி

    • சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த செங்கோடன், நடுவனேரியில் 6 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள், திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர்.
    • நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். மேலும் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த செங்கோடன், நடுவனேரியை சேர்ந்த சாரதா, ரெட்டிப்பட்டியை சேர்ந்த ஜெயம்மாள், இவரது கணவர் தங்கமணி மற்றும் குழந்தைகள் உள்பட 6 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள், திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    இதில், மகுடஞ்சாவடி ஒன்றியம் கூடலூர் ஊராட்சி சின்னஆண்டிப் பாளையத்தில் எங்களுக்கு சொந்தமான 3.41 ஏக்கர் நிலம் உள்ளது. கூடலூர் குன்னிப்பாளையம், கோவையை சேர்ந்த சிலர், முதல்-அமைச்சர் மனைவியின் உறவினர் எனக் கூறிக்கொண்டு, இந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். மேலும் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சங்ககிரி கோட்டாட்சியர், சார்பதிவாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்கொலை செய்துகொள்ளலாம் என இங்கு வந்தோம் என அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×