என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் போதை பழக்கத்தில் இருந்து 86 மாணவர்கள் மீட்பு
- நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூ ரியில் பாதையை மாற்றும் போதை என்ற தலைப்பில் பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
- மேலும் அரசால் தடை செய்யப்பட்ட, போதையை உருவாக்கும் பாக்குகளை விற்பனை செய்த 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அவர்களது சொத்துக்கள் முடக்கப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூ ரியில் பாதையை மாற்றும் போதை என்ற தலைப்பில் பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமை வகித்து பேசியதாவது,
கொரோனா பரவல் காலத்தில் சிலர் தனிமை சூழலில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையை மாற்றும் வகையில் நாமக்கல் மாவட்டத்தை போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் அனைத்து துறைகளும் சேர்ந்து காவல்துறை பங்க ளிப்புடன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விண்ணை தொடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 177 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதை பொருட்களால் புற்றுநோய் ஏற்படுதல் உள்ளிட்ட தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிகாட்டப்பட்டன.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ லர்கள் கொடுத்த தகவ லின் அடிப்படையில் 86 மாணவர்கள் போதை பொருட்கள் பழக்கத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட, போதையை உருவாக்கும் பாக்குகளை விற்பனை செய்த 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அவர்களது சொத்துக்கள் முடக்கப்பட்டன. தவறு செய்த 2 பேர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய நம்பிக்கை ஊட்டல் காரணமாக பல்வேறு புகார்கள் மற்றும் ஆலோசனைகள் கூறி குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தினசரி தொலைபேசி அழைப்புகள் வரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
முகாமில் பங்கேற்றுள்ள பேராசிரியர்கள் தங்களது சமூகப் பொறுப்புணர்வை உணர்ந்து முயற்சி மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்ட வேண்டும். முகாமை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு விண்ணை தொடு வழிகாட்டுதல் நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும். முதல் கட்டமாக கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரி வளாகத்தை போதை பொருட்கள் இல்லாத வளாகமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சாய்சரன் தேஜஸ்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சதீஷ், மாவட்ட சமூக நல அதிகாரி கீதா, கல்லூரி முதல்வர் குமாரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்