என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகமான குழந்தைகளை ஏற்றி சென்ற 9 ஆட்டோக்கள் பறிமுதல்-போக்குவரத்து அதிகாரிகள்  நடவடிக்கை
    X

    அதிகமான குழந்தைகளை ஏற்றி சென்ற 9 ஆட்டோக்கள் பறிமுதல்-போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

    • நெல்லை, வள்ளியூர், அம்பை மற்றும் நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் அந்தந்த வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்பு வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை துணை போக்குவரத்து ஆணையர் நடராஜனின் உத்தரவுப்படி நெல்லை, வள்ளியூர், அம்பை மற்றும் நாகர்கோவில், மார்த்தாண்டம், பகுதிகளில் அந்தந்த வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்பு வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது,வள்ளியூர் பகுதியில் அதிகமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 100 டன் வரை அதிக கனிம பொருட்களை ஏற்றிச்சென்ற 11 வாகனங்களுக்கு ரூ.4.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்ற 9 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆட்டோக்கள் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டன.

    Next Story
    ×