என் மலர்
உள்ளூர் செய்திகள்
குன்னூர் விபத்தில் 9 பேர் பலியான விவகாரம்- பஸ் டிரைவரின் உரிமம் 10 ஆண்டு ரத்து
அருவங்காடு,
தென்காசி மாவட்டம் மாவட்டம் கடையத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கடந்த 30-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு ஊட்டியில் இருந்து தனியார் பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மரப்பாலம் அருகே வந்த போது 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. இதில் 9 பேர் பலியானதுடன் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக குன்னூர் போலீசார் பஸ் டிரைவர்கள் முத்துக்குட்டி, கோபால் மற்றும் பஸ் உரிமையாளர் சுப்ரமணி, சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சிகிச்சையில் இருந்து வந்த ஓட்டுநர் முத்துக்குட்டியை போலீசார் கைது செய்து, ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பொறுப்பற்ற நிலையில் பஸ் ஓட்டி சென்றதற்காக முத்துக்குட்டியின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டு காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.