search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 416 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.94.26 கோடி கடன்
    X

    கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 416 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.94.26 கோடி கடன்

    • முதல்-அமைச்சர் கலந்துகொண்டு கடனு தவி களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்க ண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு ஊரக வாழ் வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக சுய உதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவி லான கூட்ட மைப்பு களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திருச்சியில் நடை பெற்ற அரசு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா வில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டு கடனு தவி களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்க ண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 329 மகளிர் சுய உதவி குழுக்க ளுக்கு வங்கி கடன் ரூ.12.20 கோடி மதிப்பீட்டிலும், 87 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் ரூ.82.06 கோடி மதிப்பீட்டில் என 416 மகளிர் சுய உதவிக்குழுக்க ளுக்கு ரூ.94.26 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணண், மாவட்ட ஊராட்சி குழுதலைவர் புவனேஸ்வரி பெருமாள், தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கக திட்ட இயக்கு னர் சுந்தராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, இந்தி யன் வங்கி துணை பொது மேலாளர் (கடலூர்) கவுரி சங்கர்ராவ், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் முனீஸ்வரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×