search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 5 கிலோ கட்டி அகற்றம்
    X

    அறுவை சிகிச்சை செய்த விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி தலைமையிலான மருத்துவ குழுவினர். 

    விழுப்புரம் பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 5 கிலோ கட்டி அகற்றம்

    • அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
    • 5 கிலோ எடை–யி–லான கட்டி இருப்–பது கண்–டறி–யப்–பட்டது.

    விழுப்புரம்:

    வேலூர் மாவட்டம் வாழப்–பந்–தல் கிரா–மத்தை சேர்ந்–த–வர் மொழிச்–செல்–வம் மனைவி பரி–மளா(வயது 33). இவ–ருக்கு கடந்த ஜூலை மாதம் கடு–மை–யான வயிற்று வலி ஏற்–பட்டது. இதை–ய–டுத்து அவர் சிகிச்–சைக்–காக முண்–டி–யம்–பாக்–கத்–தில் உள்ள விழுப்–பு–ரம் அரசு மருத்–து–வக்–கல்–லூரி மருத்–து–வ–ம–னையில் அனு–ம–திக்–கப்–பட்டார். அவ–ருக்கு கர்ப்–பப்–பை–யில் 5 கிலோ எடை–யி–லான கட்டி இருப்–பது கண்–டறி–யப்–பட்டது.

    அதைத் தொடர்ந்து கல்–லூரி முதல்–வர் கீதாஞ்–சலி தலை–மையில் மக–ளிர் மற்–றும் மகப்–பேறு துறை தலை–வர் ராஜேஸ்–வரி தலை–மை–யில் டாக்–டர்–கள் சங்–கீதா, இளை–ய–ராஜா, நித்–திய பிரி–ய–தர்–ஷினி, சிறு–நீ–ர–கத்–துறை நிபு–ணர்–கள் அரு–ண–கிரி, பாஸ்–கர், மயக்–க–வி–யல் நிபு–ணர் டாக்–டர்–கள் செந்–தில்–கு–மார், மகேந்–தி–ரன், திருச்–செல்–வம் உள்–ளிட்டோர் கொண்ட மருத்–துவ குழு–வி–னர் அறுவை சிகிச்சை செய்து, கட்–டியை அகற்றி சாதனை படைத்–த–னர்.

    இது–கு–றித்து முதல்–வர் கீதாஞ்–சலி கூறு–கை–யில், இது போன்ற அறுவை சிகிச்–சையைதனி–யார் மருத்–து–வ–ம–னை–யில் செய்–தால் ரூ.2 லட்சம் வரை செல–வா–கும். ஆகவே ஏழை, எளிய மக்–கள் இது போன்ற அறுவை சிகிச்–சை–க–ளுக்கு அரசு மருத்–து–வ–மனையை பயன்–ப–டுத்–திக் கொள்ள வேண்–டும் என்–றார். அப்–போது மருத்–துவ துணை கண்–கா–ணிப்–பா–ளர் புக–ழேந்தி, நிலைய மருத்–துவ அலு–வ–லர் ரவிக்–கு–மார், உதவி நிலை மருத்–துவ அலு–வ–லர் நிஷாந்த், நிர்–வாக அலு–வ–லர் சக்–தி–வேல் மற்–றும் அறுவை சிகிச்சை செய்த டாக்–டர்–கள் குழு–வி–னர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×