என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பரமத்திவேலூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் ஜெயிலில் அடைப்பு பரமத்திவேலூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் ஜெயிலில் அடைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/04/28/1873155-13.webp)
X
பரமத்திவேலூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் ஜெயிலில் அடைப்பு
By
மாலை மலர்28 April 2023 1:14 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 14 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி புகழேந்தியிடம் இருந்து சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் புகழேந்தி (வயது 21). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் 14 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி புகழேந்தியிடம் இருந்து சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுமியை கடத்திய புகழேந்தி மீது, பரமத்தி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
X