என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுற்றுலா வாகன நிறுத்தமாக மாறிய பேருந்து நிலையம்
- ரூ. 17 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
- பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
அரூர்,
அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. எனவே தினந்தோறும் அதிக அளவிலான பக்தர்கள் இங்கு வந்து செல்வர்.
அத்துடன் திருவண்ணாமலை பேருந்துகளும் இந்த வழியாக சென்று வருகிறது. சாலையில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு 2013ல் ரூ. 17 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்த பொதுமக்கள் கூறுகையில், பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
இதனால் அரசு, தனியார் பேருந்துகள் சாலையிலேயே நின்று சென்றுவிடுகிறது, பேருந்திற்கு காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் சாலையிலேயே காத்திருக்க நேரிடுகிறது. இத்துடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
தற்போது அந்த பேருந்து நிலையம் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. எனவே பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.