என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் மாட்டை திருடி விற்றவர் மீது வழக்கு
- ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள எருமை மாடு ஒன்று வளர்த்து வருகிறார்.
- வெள்ளிங்கிரி மேட்டுப்பாளையம் போலீசில்புகார் அளித்தார்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை சாலை சமயபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (32). விவசாயி. இவர் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள எருமை மாடு ஒன்று வளர்த்து வருகிறார். கடந்த மே மாதம் 27-ந் தேதி இவரது மாடு காணாமல் போனது.
இந்த நிலையில் நேற்று பத்ரகாளியம்மன் சாலை வேல் நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மாட்டு கொட்டகையில் மாடு கட்டியிருந்ததை பார்த்த அவர் அங்கு சென்று விசாரித்தார். அதற்கு கோவிந்தன் இது உங்களின் எருமைமாடு என்பது எனக்கு தெரியாது. நான் இதனை கல்லாறு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (46) என்பவரிடம் விலைக்கு வாங்கினேன் என்றார்.
இதையடுத்து வெள்ளியங்கிரி கல்லாறு சென்று ராஜ்குமாரிடம் விசாரித்தார். அப்போது ராஜ்குமார் இந்த எருமை மாடு உன்னுடையது தான், நான் தான் எடுத்து வந்து விற்றேன். உன்னால் என்ன செய்ய முடியும் என்று வெள்ளியங்கிரியை மிரட்டினார்.
இது தொடர்பாக வெள்ளிங்கிரி மேட்டுப்பாளையம் போலீசில்புகார் அளித்தார். மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் முருகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.