search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை ஓர பள்ளத்தில் இறங்கிய கண்டெய்னர் லாரி
    X

    சாலையோர பள்ளத்தில் இறங்கிய கண்டெய்னர் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்ற போது எடுத்த படம். 

    சாலை ஓர பள்ளத்தில் இறங்கிய கண்டெய்னர் லாரி

    • ஈரோடு மாவட்டம் பவானி நெடுஞ் சாலையை அகலப்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • நேற்று நள்ளிரவில் எதிர்பாராத விதமாக இந்த சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டது.

    மேட்டூர்:

    தர்மபுரி மாவட்டம் தொப்பூர் - ஈரோடு மாவட்டம் பவானி நெடுஞ் சாலையை அகலப்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் உள்ள சிறிய பாலங்கள், கல்வெட்டு கள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி, சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலைய 4 ரோடு அருகே உள்ள கல்வெட்டை அகலப்படுத்தும் பணிக்காக சாலையை ஒட்டி பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று, நேற்று நள்ளிரவில் எதிர்பாராத விதமாக இந்த சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேட்டூர் போலீசார், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கிரேன் மூலம் கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டு, அந்த வழித்தடத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    Next Story
    ×