என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரி பஜாரில் மின்கம்பம் முறிந்து கடை மீது சாய்ந்தது
- இதே மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கான மின் இணைப்புகளின் மூலம் மின் சப்ளையும் தொடர்கிறது.
- கேபிள் வயர் தாழ்வாக கிடந்துள்ள நிலையில் அவ்வழியாக சென்ற மினி லாரி ஒன்றில் கேபிள் வயர் சிக்கி இழுக்கப்பட்டதால் இந்த மின் கம்பம் ஒடிந்து சரிந்தது தெரிய வந்துள்ளது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மெயின் பஜார் சாலை ஓரமாக மின் கம்பங்கள் உள்ளன. இவற்றில் மத்திய பஜார் சந்தைக்கு எதிர்ப்புறம் உள்ள கான்கிரீட் மின் கம்பம் ஒன்று நேற்று இரவு அடி பாகத்தில் முறிந்த நிலையில் அருகில் உள்ள கடை சுவரில் சாய்ந்தது. ஆனால் இதற்கான மின் கம்பியில் உயர் அழுத்த மின்சாரம் இன்னும் சென்று கொண்டிருக்கிறது.
மேலும் இதே மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைக ளுக்கான மின் இணைப்புகளின் மூலம் மின் சப்ளையும் தொடர் கிறது.
பஸ் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் அபாயகரமான நிலையில் இருக்கும் இந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்ற மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் இந்த மின்கம்பத்தில் இருந்து அடுத்த மின் கம்பத்திற்கு இடையில் தடிமனான கேபிள் வயர் சென்றுள்ளது. அது தாழ்வாக கிடந்துள்ள நிலையில் அவ்வழியாக சென்ற மினி லாரி ஒன்றில் கேபிள் வயர் சிக்கி இழுக்கப்பட்டதால் இந்த மின் கம்பம் ஒடிந்து சரிந்தது தெரிய வந்துள்ளது.
இதே போல் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் பகுதிகளில் மின் கம்பங்கள் வழியாக தாழ்வாக செல்லும் கேபிள் வயர்களால் மேலும் பல விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு மின் கம்பங்கள் வழியாக இதுபோன்ற கேபிள் வயர்கள் செல்வதை அகற்றவும், தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.