என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிக்கு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிக்கு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு](https://media.maalaimalar.com/h-upload/2022/06/17/1714198-chess-board-500x500.jpg)
X
கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிக்கு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு
By
மாலை மலர்17 Jun 2022 3:49 PM IST (Updated: 17 Jun 2022 3:58 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிக்கு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு நடக்கிறது.
- மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கு சதுரங்க போட்டி தேர்வு கடலூரில் ஆயிரவைசிய திருமண மண்டபத்தில் நாளை (18-ந் தேதி) 19-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
கடலூர்:
தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெற உள்ள பிரம்மாண்டமான 44-வது பைடு செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கு சதுரங்க போட்டி தேர்வு கடலூரில் ஆயிரவைசிய திருமண மண்டபத்தில் நாளை (18-ந் தேதி) 19-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில் 15 வயதிற்குட்பட்ட மாணவமாணவிகள் பங்கு பெறலாம். இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் எனமொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். போட்டியில் பங்கு பெறமுன்பதிவு அவசியம். ஆண்களுக்கு 25 பரிசுகளும், பெண்களுக்கு 25 பரிசுகளும்வழங்கப்பட உள்ளது.பதிவு செய்வதற்கான நடைமுறைhttps://prs.aicf.in/new-register https://forms.gle/vSoQM34D6TMtokUi9தங்கள் பதிவை உறுதி செய்ய 8012568392 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Next Story
×
X