என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மரம் முறிந்து விழுந்து மீன் வியாபாரி சாவு
- நேற்று இரவு காற்று வாங்குவதற்காக வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தார்.
- நாச்சியார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே பழவாத்தான்கட்டளை சேர்ந்தவர் முனுசாமி (வயது 40).
இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் முனுசாமி நேற்று இரவு காற்று வாங்குவதற்காக தனது வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது காற்று பலமாக வீசியுள்ளது.
இந்நிலையில் வீட்டின் அருகில் நின்றிருந்த தென்னை மரம் காற்றினால் திடீரென முறிந்து மாடியில் நின்று கொண்டிருந்த முனுசாமி மீது விழுந்தது.
இதில் அவர் படுகாயம் அடைந்து வலி தாங்க முடியாமல் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து மாடிக்கு வந்தனர்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாச்சியா ர்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இறந்து போன முனிசாமி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடதக்கது.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.