என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே மில் ஊழியரிடம் செல்போன் பறித்த கும்பல்
- சம்பவத்தன்று இரவில் ரவிக்குமார் மில்லுக்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருக்குறுங்குடி தென்கரை கீழத்தெருவை சேர்ந்த மாதவன், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த அக்பர் அலி உள்பட 4 பேர் ரவிக்குமாரிடம் செல்போன்,பணம் தருமாறு கேட்டனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது29). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் மேற்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று இரவில் இவர் மில்லுக்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் டாஸ்மாக் கடை அருகில் சென்ற போது மோட்டர் சைக்கிள் பஞ்சரானது. இதனால் அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருக்குறுங்குடி தென்கரை கீழத்தெருவை சேர்ந்த மணி மகன் மாதவன் (23), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அக்பர் அலி (19) உள்பட 4 பேர் ரவிக்குமாரிடம் செல்போன்,பணம் தருமாறு கேட்டனர்.
அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாதவன் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.