என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டம், கூட்டமாக படையெடுக்கும் யானைகள்
- பயிர்களை சேதப்படுத்தி வருவது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்று வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதிகளில் காட்டு யானைகள் விளைநிலங்களை நோக்கி படையெடுப்பது மற்றும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வது தொடர்ந்து நடைபெறும் ஒன்றாக இருக்கிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு பகுதியிலிருந்து வெளியேறிய யானை விளைநிலங்களில் தஞ்சம் அடைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பின்னிக்கல் கிராமத்திற்குள் நுழைந்து தக்காளி, பீன்ஸ், கோஸ் உள்ளிட்ட பயிர்களை யானை சேதப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்று வருகின்றனர்.
Next Story






