search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் அரசு பஸ், லாரியை மறித்த ஒற்றை காட்டு யானை
    X

    மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் அரசு பஸ், லாரியை மறித்த ஒற்றை காட்டு யானை

    • வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்து வருகின்றன.
    • அரசு பஸ் மற்றும் லாரி, அதனை தொடர்ந்து மற்ற வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, மான், காட்டெ ருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்து வருகின்றன. சில நேரங்களில் வாகனத்தை மறித்தும் வருகிறது.

    இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் வழக்கம் போல் ஏராளமான வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.

    அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று சாலையை நோக்கி வேகமாக வந்தது. சாலையின் நடுவே நின்று கொண்ட காட்டுயானை அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் வாகனங்களை மறித்தது.

    இதனால் அரசு பஸ் மற்றும் லாரி, அதனை தொடர்ந்து மற்ற வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    யானை நின்றதை பார்த்ததும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் தாங்கள் வந்த வழியே செல்ல முற்பட்டனர். அப்போது சிலர் அலாரம் எழுப்பியதால் மிரண்டு போன காட்டு யானை திடீரென பஸ்சின் அருகே வந்து பஸ்சின் முன் கண்ணாடியை உடைத்தது. மேலும் லாரி மற்றும் கார் கண்ணாடிகளையும் உடைத்து எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

    இதனால் பஸ்சில் இருந்து பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பயத்தில் உறைந்து போயினர். சற்று நேரம் அங்கேயே சுற்றிய யானை காட்டுப்பகுதிக்குள் சென்றது. யானை சென்ற பின்னரே வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை அங்கிருந்து வேகமாக இயக்கி சென்றனர். இதனால் இப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×