search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், இந்திய மாதர் தேசிய சம்மேளன கூட்டம்
    X

    தஞ்சையில், இந்திய மாதர் தேசிய சம்மேளன கூட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில், இந்திய மாதர் தேசிய சம்மேளன கூட்டம்

    • கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும்.
    • இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தி.மு.க அரசு உடனே தொடங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் சுந்தரவல்லி தலைமை வகித்தார். மாநில செயலாளர் மஞ்சுளா பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி வாழ்த்துரை வழங்கினார்.

    மாநில நிர்வாகிகள் ராஜலட்சுமி, வளர்மதி, கண்ணகி, நிசா சத்தியன், லலிதா, லதா, தனலட்சுமி, சபியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    டாக்டர்கள் முருகபிரியா , வானதி ஆகியோர் பெண்களின் நலன் குறித்து பேசினர்.

    இந்த கூட்டத்தில், கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தி.மு.க அரசு உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக தஞ்சை மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

    Next Story
    ×