search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது அருந்தும் பார் ஆக மாறிய தேசிய நெடுஞ்சாலை
    X

    மது அருந்தும் பார் ஆக மாறிய தேசிய நெடுஞ்சாலை

    • தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை அறிவிக்கப்படாத பாராக மாறிவிட்டது.
    • கண்ணாடி பாட்டில் உடைந்து கண்ணாடி துகள்கள் எங்கெங்கும் சிதறி கிடைக்கிறது.

    காரிமங்கலம்,

    காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் தனியார் கல்வி நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் இரு புறமும் சர்வீஸ் சாலை உள்ளது. இதில் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வரும் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை அறிவிக்கப்படாத பாராக மாறிவிட்டது.

    மாலை நேரம் தொடங்கியது முதல் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி வரும் குடிமகன்கள் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து அதை மது அருந்தும் கூடமாக மாற்றிவிட்டனர். இவ்வாறு சட்ட விரோதமாக மது அருந்தும் குடிமகன்கள் கூச்சலிட்டும் ஆபாச வார்த்தையில் பேசி வருவதால் சர்வீஸ் சாலை வழியே செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் அவ்வழியே செல்லும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கேலி கிண்டல் கலாட்டாவும் செய்து வருகின்றனர். போதை தலைக்கு ஏறி மது பாட்டில்களை சர்வீஸ் சாலை பகுதியிலேயே தூக்கி வீசி வருவதால் கண்ணாடி பாட்டில் உடைந்து கண்ணாடி துகள்கள் எங்கெங்கும் சிதறி கிடைக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்துவரும் சர்வீஸ் சாலை குடிமகன்களின் கூடாரமாக மாறி வருவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகம் மற்றும் டோல்கேட் பராமரிப்பு நிறுவனம், போலீசார் உரியகவனம் செலுத்தி சர்வீஸ் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×