search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாம்பவர் வடகரை புளியம்பட்டி தெருவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்- கலெக்டரிடம், பேரூராட்சி தலைவர் மனு
    X

    பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கிய காட்சி.

    சாம்பவர் வடகரை புளியம்பட்டி தெருவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்- கலெக்டரிடம், பேரூராட்சி தலைவர் மனு

    • நீர்த்தேக்க தொட்டி எப்போது வேணாலும் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு போதுமான தாமிரபரணி குடிநீர் கிடைக்காததால் அது கிடைக்கும்படி செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். அக்கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    சாம்பவர் வடகரை விவசாயிகளின் நலன் கருதி அங்கன்வாடி அருகில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் கீழ்புறம் மற்றும் சுண்ணாம்பு உலை அருகில் உள்ள அரசு புறம்போக்கு பகுதிகளில் உலர் களம் அமைத்து தர வேண்டும். மேலும் சாம்பவர்வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் உள்ள உலர் களத்தை தரம் உயர்த்தி சரி செய்து தர வேண்டும். சாம்பவர் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய வார்டு எண் 1, புதிய வார்டு என்ற 2 புளியம்பட்டி தெருவில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2001-2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 2013-2014 ஆம் ஆண்டு பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதன் கொள்ளளவு ஒரு லட்சம் லிட்டர் ஆகும். தற்போது இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மேல் கூரை உடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த நீர்த்தேக்க தொட்டி எப்போது வேணாலும் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளது. அதனால் இந்த நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சாம்பவர் வடகரை பொதுமக்களுக்கு போதுமான தாமிரபரணி குடிநீர் கிடைக்காததால் அது கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் அனைத்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×