என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி தேனாடு ஊராட்சியில் ரூ.29.50 லட்சம் செலவில் புதிய கட்டிடம்- ஆ.ராசா எம்.பி திறந்து வைத்தார்
- அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட பள்ளிவளாக தடுப்புச்சுவர் மற்றும் முடிவுற்ற புனரமைப்பு பணிகளையும் தொடங்கினார்
- 21 குடியிருப்புகளை திறந்து வைத்து பயனாளிகளுடன் கலந்துரையாடினார்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த தேனாடு பகுதியில் ராஷ்டிரிய கிராம சுராஜ் அபியான் அபியான் திட்டத்தின் கீழ், ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம், கோவை நெட்கான் நிறுவனத்தின் சமூகபொறுப்பு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட பள்ளிவளாகத்தில் தடுப்புச்சுவர் மற்றும் முடிவுற்ற புனரமைப்பு பணிகளை நீலகிரி எம்.பி ஆ.ராசா திறந்து வைத்தார்.
பின்னர் கடந்த ஆண்டு 10-ம்வகுப்பு பொதுத் தேர்வில் 3 இடங்கள் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து ஆ.ராசா எம்.பி நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் பழங்குடியினர் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
ஒரு சமூகம் முன்னேற்ற கல்வி அவசியம். இது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி கல்வித்துறை சார் பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு துறையின் வாயிலாகவும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனை வரும் தெரிந்து கொண்டு பயன்பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கீழகட்டப்பெட்டு பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் தலா ரூ.2.66 லட்சம் மதிப்பிலான 21 குடியிருப்புகளை திறந்து வைத்து பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
மேலும் அதே பகுதியில் நடைெற்று வரும் 3 குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டவர், அங்கு பணிகளை விரைவில் முடித்து சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து கெனவுக்கரை ஊராட்சி, குறிஞ்சி நகரில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஆ.ராசா எம்.பி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முதன்மை திட்டஇயக்குனர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா, உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் செல்வக்கு மார், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் செல்வகுமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ரவிக்குமார், முஸ்தபா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆல்வின் (தேனாடு), ஜெயப்பிரியா (கெணவக்கரை), நெட்கான் நிறுவன மேலாண்இயக்குனர் மகாலிங்கம், இயக்குனர் வடிவு, கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டி யன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்