என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகிரியில் அமைச்சர் ரகுபதிக்கு தி.மு.க. சார்பில் வரவேற்பு
- சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு சிவகிரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அமைச்சர் ரகுபதி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிவகிரி:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தென்காசி மாவட்டத்தின் ஆரம்ப எல்லையான சிவகிரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர் ரகுபதிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி தேவர் சிலை அருகே வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூர் செயலாளர் செண்பக விநாயகம், பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் ரகுபதி சிவகிரியில் உள்ள தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதப்பன், யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ராயகிரி செயலாளர் குருசாமி, முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராயகிரி விவேகானந்தன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.