search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த தனிப்படை அமைப்பு
    X

    பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த தனிப்படை அமைப்பு

    • நோடல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • விதிமீறல்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை,

    சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை தவிர்க்க, ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    ஆனாலும் விதிமீறல் தொடர்வதால், தினமும் டன் கணக்கில் சேகரமாகும் குப்பையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் காணமுடிகிறது. மாநகராட்சி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு முதல் முறை ரூ.25 ஆயிரம், இரண்டாவது முறை, ரூ.50 ஆயிரம், மூன்றாவது முறை ரூ. 1 லட்சம் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களுக்கு, முதன் முறை, 10 ஆயிரம், இரண்டாவது 15 ஆயிரம், மூன்றாவது முறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மளிகைக்கடைகள், மருந்துக்கடைகள் உள்ளிட்டவற்றுக்கு முதன் முறை, ரூ.1,000, இரண்டாவதாக, ரூ.2,000, மூன்றாவதாக, ரூ.5,000-ம், சிறு வணிக விற்பனையாளர்களுக்கு முதல் முறை ரூ.100, இரண்டாவதாக, ரூ.200, மூன்றாவது முறை ரூ.500 விதிக்க விதி முறை உள்ளது. ஆனாலும் விதிமீறல்கள் தொடர்கின்றன.

    இதையடுத்து, மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கிடங்குகள், கடைகள் உள்ளிட்டவற்றில்ஆய்வு செய்துஅபராதம் விதிக்க தனிப்படை அமைத்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்காக, பிளாஸ்டிக் நோடல் அலுவலராக, சலேத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் தொடர்பான புகார்களை நோடல் அலுவலரின், 94894-57403 என்ற செல்போன் எண்ணில், பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.

    தனிப்படையில் சுகாதார ஆய்வாளர் உள்ளிட் டோர் இடம்பெற்று உள்ளனர். தற்போது, பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இதனால் விதிமீறல்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×