என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவாரூர் அஞ்சலகத்தில் ஸ்பீடு போஸ்ட், பார்சல் பிரிவுவை ஏற்படுத்தி தர வேண்டும்
- சங்க 34-வது கோட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது.
- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப ஊழியர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூரில் தபால்துறை யின் அகில இந்திய ஆர்எம்எஸ், எம்எம்எஸ் ஊழியர் சங்க 34-வது கோட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கோட்டப்பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில முன்னாள் அமைப்பு செயலாளர் தர்மதாஸ் தேசிய கொடியேற்றினார். சம்மேளனக் கொடியை மாநில செயலாளர் ரமேஷ் ஏற்றி வைத்தார். முன்னாள் மாநிலத்தலைவர் கணேசன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். நாகை மாலி எம்எல்ஏ, மாநில செயலாளர் பரந்தாமன், எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் திருவாரூர் அஞ்சலகத்தில் ஸ்பீடு போஸ்ட், பார்சல் பிரிவு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு ஏற்ப ஊழியர்களுக்கு மாதம் 12 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கோட்ட துணைத் தலைவர் மனோஜ் குமார் வரவேற்றார்.
முடிவில் கிளைச்செயலாளர் சத்தியராஜ் நன்றி கூறினார்.