search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அழிந்து வரும் விகடக்கலையை மீட்டெடுக்கும் தஞ்சை முதியவர்
    X

    விகடக்கலை கலைஞர் கல்யாணசுந்தரம்.

    அழிந்து வரும் விகடக்கலையை மீட்டெடுக்கும் தஞ்சை முதியவர்

    • பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் விருதுகளையும் பெற்றுள்ளார்.
    • விகடக்கலை மெமிக்ரி என்று மாறியதாலும் இக்கலை அழிந்து கொண்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    விகடக்கலை என்பது மன்னர்கள் காலத்தில் இருந்த பாரம்பரிய கலையாகும். சிரிப்பையும் சிந்தனையையும் ஊட்டக்கூடிய வகையில் இக்கலை மிகவும் அரிதாக இருந்துள்ளது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தெனாலிராமன் என்ற அரசவை கலைஞர் விகடக்கலையில் சிறந்து விளங்கினார்.

    தெனாலிராமன் கதைகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலாதி பிரியம்.

    இந்நிலையில் தஞ்சையை சேர்ந்த கலைமாமணி குன்னியூர் கல்யாணசுந்தரம் (வயது 80) என்பவர் விகடகலையை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்த கலையை செய்து வருகிறார்.

    தமிழகத்தில் இவர் ஒருவர் மட்டுமே விகடக்கலையை இன்றும் சிரிப்பும் சிந்தனையுடனும், பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் நடைபெறும் விழாக்களில் நடத்தி வருகிறார்.

    அதன் மூலம் பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் விருதுகளையும் பெற்றுள்ளார்.

    இவர் நிகழ்ச்சிகளில் பேசும்போது சமுதாயத்திற்கு சிந்தனை கருத்துக்கள் கூறுவது மட்டும் அல்லாமல், தனது குரலில் பறவைகள், விலங்குகள் போல் மயில், கிளி, குயில், அணில், தவளை, எருமை மாடு, நாய், ரயில், உடுக்கு சத்தம், மோட்டார் இன்ஜின் போன்ற சத்தங்க ளையும் தத்ரூபமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை ரசிக்க வைப்பார்.

    நாகரிகம் மாற்றத்திற்கு ஏற்றார் போல் விகட கலைக்கு போதிய ஆதரவு இல்லாததாலும், விகடக்கலை மெமிக்ரி என்று மாறியதாலும் இக்கலை அழிந்து கொண்டு வருகிறது.

    இதுகுறித்து விகடக்கலை கலைஞர் கல்யாணசுந்தரம் கூறும்போது, சிறுவயதில் விகடக்கலையை பற்றி தெரிந்து கொண்டு திருவிசநல்லூர் ராமசாமி சாஸ்திரிகளை மானசீக குருவாக ஏற்று தற்போது இந்த கலையை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடந்த 50 ஆண்டுகளாக நிகழ்ச்சிகள் மூலம் கொண்டு செல்கிறேன்.

    போதிய வருமானம் இல்லாததால் இந்தக் கலை தற்போது நலிவடைந்துள்ளது.

    தமிழ்நாடு அரசு சார்பில் பொற்கிழி விருது பெறுவதற்கு முயற்சி செய்கிறேன்.

    இந்தக் கலையை கவுரவப்படுத்தினால் முன்னாள் விகட கலைஞர் தெனாலிராமனை கவுரவிப்பது போல் இருக்கும் என்றார்.

    Next Story
    ×