என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருப்பூர் அருகே வாலிபர் தற்கொலை முயற்சி
- கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன்.
- நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டில் திடீரென சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார்.
சேலம்:
சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தினேஷ் குமார் (வயது 23). இவர் நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டில் திடீரென சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார்.
இதைக் கண்ட அவரது சகோதரர் பூபாலன், உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தினேஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தினேஷ்குமார் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






