search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூரில் ரெயில் நிலையத்துக்கு குடிபோதையில் மிரட்டல் விடுத்த வாலிபர்
    X

    சூலூரில் ரெயில் நிலையத்துக்கு குடிபோதையில் மிரட்டல் விடுத்த வாலிபர்

    • பஸ் நிலையத்தில் வாலிபர் கூறியபடி வெடி குண்டு ஏதும் இல்லை.
    • முத்துகாதரை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடை த்தனர்.

    சூலூர்,

    சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையை கோவையில் இருந்து பேசுவதாக கூறி வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.

    அவர் போலீ சாரிடம் கோவி ல்பாளையம் பகுதி யில் சிலர் நின்று கொண்டு சூலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் சூலூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசுவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    உடனடியாக கட்டு ப்பாட்டு அறையில் இருந்த போலீசார் இதுகுறித்து சூலூர் மற்றும் கோவி ல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சூலூர் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்துக்கு சென்று வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்தனர். ஆனால் வாலி பர் கூறியபடி வெடி குண்டு ஏதும் இல்லை.

    இது குறித்து சூலூர் போலீசார் போனில் பேசிய வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பொய் புகார் அளித்தது சூலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து காதர் (வயது 29) என்பது தெரிய வந்தது. இதனை யடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசார ணையில் அவர் கடந்த 10-ந் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து உள்ளார். அப் போது அவரது செல் போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இதனை யடுத்து அவர் அருகே உள்ள அவரது வீட்டிற்கு சென்று செல்போனை சார்ஜ் போட்டார். பின்னர் முத்து காதர் அவரது மனைவியின் செல்போனை எடுத்து கொண்டு வெளியே வந்து மீதமுள்ள மதுவை குடித்து உள்ளார். போதை தலைக் கேறிய நிலையில் இருந்த அவர் பொய் புகார் அளி த்தது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட முத்து காதரை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடை த்தனர்.

    Next Story
    ×