என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்தம் போட்டு விளையாடியதால் இரு தரப்பினரிடையே மோதல் வாலிபர் கைது
- சேலம் மணியனூர், நாக லிங்கம் தெரு பகுதியில் நேற்று இவரது வீட்டின் அருகே உள்ள காபி பார் பக்கம் சில வாலிபர்கள் அமர்ந்து கொண்டு செல்போனில் கேம்ஸ் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
- வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு, திடீரென ஆத்திரத்தில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூர், நாக லிங்கம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிட்டிபாபு ( வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் நேற்று இவரது வீட்டின் அருகே உள்ள காபி பார் பக்கம் சில வாலிபர்கள் அமர்ந்து கொண்டு செல்போனில் கேம்ஸ் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் எழுந்த சத்தம் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக சிட்டிபாபு, அவர்களிடம், அந்த பக்கம் சென்று விளையாடும் படி கூறினார். அதற்கு அந்த வாலிபர்கள், நாங்கள் இங்கு தான் விளையாடுவோம் என கூறியதாக தெரி கிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு, திடீரென ஆத்திரத்தில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதில் படுகாயமடைந்த சிட்டிபாபு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அடிதடி பிரிவில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் , மணியனூர் காந்தி நகர் மதுரை வீரன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த, வெள்ளிப்பட்டறை தொழிலாளி தினேஷ் (22) என்பவரை கைது செய்தனர். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.






