search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் -பணம் கொள்ளை
    X

    திண்டிவனம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் -பணம் கொள்ளை

    • அடையாளம் தெரியாத 2 பேர் அவரது வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர்.
    • மயக்கம் தெளிந்து அந்த வழியே சென்றவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

    விழுப்புரம்:

    திருக்கோவிலூர் அடுத்த அருங்குருக்கை கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் தமிழ்(வயது23). இவர் நேற்று இரவு சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.அவர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது,அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் அவரது வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர். பின்னர் வரும் வழியில் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது லிப்ட் கேட்டு வந்த இளைஞர்கள் தாங்கள் சிறுநீர் கழிப்பதாக கூறி வாகனத்தை நிறுத்த சொன்னதாக தெரிகிறது.

    அங்கு மறைவில் நின்றிருந்த மற்றும்3 பேர் சேர்ந்து 5 பேர் வாலிபர் தமிழை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த செல்போனை கேட்டுள்ளனர். செல்போ னை தர மறுத்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகில் ஒருவர் குத்த மற்றவர்கள் அவரின் முகத்தில் ஓங்கி அடித்துள்ளனர் . இதில் நிலை குலைந்த தமிழ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அந்த கும்பல் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மணி பர்ஸ் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மயங்கி விழுந்த தமிழ் அதிகாலை 4.30 மணியளவில் மயக்கம் தெளிந்து அந்த வழியே சென்றவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவரை திண்டிவனம் அரசு மரு த்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டிய ம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழிப்பறி சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைசெய்து வருகின்றனர்.

    Next Story
    ×