search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ விபத்து
    X

    எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ விபத்து

    • தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • வீரர்கள் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    கோவை:

    தீபாவளி நாட்களில், பட்டாசு வெடி விபத்து ஏதாவது நடந்தால் அதனை சரி செய்ய தீயணைப்பு படையினர் தயாராக இருப்பார்கள். ஆனால், நேற்று பட்டாசு வெடி விபத்துகள் எதுவும், பெரியளவில் நடக்கவில்லை.

    ஆனால், அவினாசி ரோடு பழைய மேம்பாலம் அருகே உள்ள கடலைக்கார சந்து எலக்ட்ரிக்கல் கடையில், நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடைகள், வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ள அந்த பகுதியில், தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்களும், குடியிருப்போரும் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடினர். இதுகுறித்து உடனே தெற்கு தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வராததால் காந்திபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் ஒரு வாகனமும் உதவிக்கு வரவழைக்கப்பட்டது.

    வீரர்கள் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் கடையில் இருந்த ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமாகி விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×