search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை காமராஜா் மார்க்கெட்டில் திருநங்கைகளுக்கு காய்கறி கடை
    X

    கடைக்கான சாவியை மேயர் சண்.ராமநாதன் திருநங்கை சத்யாவிடம் வழங்கினார்.

    தஞ்சை காமராஜா் மார்க்கெட்டில் திருநங்கைகளுக்கு காய்கறி கடை

    • சந்தையில் திருநங்கைகளுக்கு கடைகள் வழங்குவது இதுவே முதல் முறை.
    • வாடகை மூலம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 கோடி வருவாய் கிடைக்கும் என்றாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரண்மனை வளாகம் அருகேயுள்ள காமராஜா் காய்கனி சந்தையில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 4.1 ஏக்கா் பரப்பளவில் ரூ. 20.26 கோடியில் புதிதாகக் கடைகள் கட்டப்பட்டன. இதில், 201 சிறிய கடைகள், 87 பெரிய கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    புதுப்பிக்கப்பட்ட இச்சந்தையைத் கடந்த மாதம் 22-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

    ஆனால், பொது ஏலத்தில் கடைகள் எடுத்த வியாபாரிகளுக்கு சாவி வழங்கப்படாமல் இருந்தது.

    இதனிடையே, இச்சந்தையில் ஏற்கெனவே கடை நடத்தியவா்கள், தங்களுக்கும் கடை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பாக பழைய வியாபாரிகளிடம் மேயரும், மாநகராட்சி ஆணையரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    இதைத்தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் பொது ஏலத்தில் கடைகள் எடுத்த புதிய மற்றும் பழைய வியாபாரிகளுக்கு சாவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், வியாபாரிகளிடம் மேயா் சண். ராமநாதன் சாவியை ஒப்படைத்தாா்.

    அப்போது, மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா் உடனிருந்தாா்.பின்னா், மேயர் சண்.ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் பொது ஏலத்தில் கடைகள் வியாபாரிகளுக்கும், இரு கடைகள் எடுத்த திருங்கைகளுக்கும் சாவி வழங்கப்பட்டது.

    சந்தையில் திருநங்கைகளுக்கு கடைகள் வழங்குவது இதுவே முதல் முறை.இச்சந்தையின் கடைகள் வாடகை மூலம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 கோடி வருவாய் கிடைக்கும் என்றாா்.

    Next Story
    ×