என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சின்னமனூரில் கன மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
- சின்னமனூரில் பகுதியில் ஒரு வாரமாக பெய்துவரும் அடைமழை காரணமாக இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
- மின்வாரிய அதிகாரிகளுக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் 23-வது வார்டு ஊர்க்காவல் தெருவில் வசித்து வரும் முத்தீஸ்வரன் (வயது 40). இவரது மனைவி ஈஸ்வரி (35) இவர்களது வீடு கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் அடைமழை காரணமாக பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அந்த சுவர் இடிந்து விழுந்தது.
அப்போது முத்தீஸ்வரன் குடும்பத்தினர் மற்றொரு அறையில் இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்க ப்பட்டது. உடனடியாக இது குறித்து அப்பகுதி வார்டு உறுப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு 23 வது வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள்ராமு, துணைத் தலைவர் முத்து க்குமார் ஆகியோர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி மாற்று ஏற்பாடுகள் செய்தனர்.
பின்பு மின்வாரிய அதிகாரிகளுக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.