என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊருக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்
- கார் மற்றும் மோட்டார் சைக்கிளை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
- வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஊட்டி
கூடலூர் அருகே ஓவேலி கிளன்வன்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் காட்டுயானை நுழைந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுயானையும் பொதுமக்களை விரட்டியவாறு இருந்தது. இந்த சமயத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதனால் பரபரப்பு காணப்பட்டது. மேலும் பெண்கள், குழந்தைகள் காட்டு யானையை கண்டு வீட்டுக்குள் ஓடி பதுங்கி கொண்டனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை ஊருக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் வருகின்றனர்.