என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தென்திருப்பேரையில் ஆதார் சிறப்பு முகாம் தென்திருப்பேரையில் ஆதார் சிறப்பு முகாம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/09/1878505-3thenthiruperaiaadhaarcamp.webp)
ஆதார் சிறப்பு முகாமை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
தென்திருப்பேரையில் ஆதார் சிறப்பு முகாம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆதார் சிறப்பு முகாம் காலை 10 -மாலை 4 மணி வரை நடைபெற்றது.
- 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்கப்பட்டது.
தென்திருப்பேரை:
இந்திய அஞ்சல் துறை, தென்திருப்பேரை பேரூராட்சி மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நடத்திய ஆதார் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. முகாமை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தொடங்கி வைத்தார்.
முகாமில் புதிய ஆதார் அட்டை எடுத்தல், ஆதார் அட்டை திருத்தம், ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பு, மேலும் இதுவரை ஆதார் அட்டை எடுக்காதவர்கள் புதிய ஆதார் அட்டை எடுக்கவும், 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் அமிர்த வள்ளி, கவுன்சிலர்கள் ஆனந்த், சண்முக சுந்தரம், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை பொன்னுசாமி, இசக்கி, துரைராஜ், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சேக் அகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.