என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காளியம்மன் கோவிலில் ஆடி மாத விழா
Byமாலை மலர்20 July 2022 4:32 PM IST
- இந்த ஆண்டு ஆடி மாத விழாவில் காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
- காளியம்மன் வேடமடைந்து பக்தர்கள் முக்கிய வீதிகளில் வலம் வந்து அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் பழமையான சொர்ண மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத விழாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் காளியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக காளியாட்ட விழா நடைபெறவில்லை. அதனால், இந்த ஆண்டு ஆடி மாத விழாவில் காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து காளியாட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காளியம்மன் வேடமடைந்து பக்தர்கள் முக்கிய வீதிகளில் வலம் வந்து அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மேளதாளங்கள் முழங்க காளியம்மன் நடனமாடியதை பக்தர்கள் கண்டுகளித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×