என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆடிக்கிருத்திகை விழா-மருதமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
- முருகனின் 7-வது படை வீடு என பக்தர்களால் கொண்டாடப்படும் மருதமலை சுப்பிர மணியசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா இன்று நடந்தது
- மதியம் 12 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வந்தார்.
வடவள்ளி:
ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதன் படி முருகனின் 7-வது படை வீடு என பக்தர்களால் கொண்டாடப்படும் மருதமலை சுப்பிர மணியசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா இன்று நடந்தது.
இதனையொட்டி இன்று அதிகாலை 6 மணிக்கு கோ பூஜையுடன் விழா தொடங்கியது. 6.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது. காலை 9 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெற்றது. பின்னர் மருதமலை சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் முன் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மதியம் 12 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வந்தார். மாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம், 5 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி -தெய்வானை சமேதராக வீதி உலா நடக்கிறது., 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, மகா தீபாராதனை, மாலை 6 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம், பூஜை, தீபாரா தனை நடைபெறுகிறது.
ஆடிக் கிருத்திகை யையொட்டி அதிகாலை முதலே கோவிலுக்கு கோவை, பொள்ளாச்சி பகுதிகள் மட்டுமின்றி, அண்டை மாவட்டமான திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் ஊர்வல மாக கோவிலுக்கு வந்தனர்.
மலை மற்றும் மலை அடிவாரத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலை மற்றும் அடிவாரத்திலும் பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்து கொண்டனர். கூட்டம் அதிகரித்ததை அடுத்து, அடிவாரத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மேலே அனுமதித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்