search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்க கூடாது
    X

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்க கூடாது

    • மருந்தகங்களுக்கு திடீர் எச்சரிக்கை
    • கூட்டத்தில் சுகாதா ரத்துறை இணை இயக்குனர் சந்திரா, துணை இயக்குனர் (குடும்பக்கட்டுப்பாடு) கவுரி, தனியார் மருந்தக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்கக் கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கோவையில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பில் தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு உதவி இயக்குனர் (மருந்து கட்டுப்பாட்டுத்துறை) குருபாரதி தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பனி, வெயில் போன்ற பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு பெரும்பாலானவர்கள் டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

    இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் மருந்துகள், வலி நிவாரணி மருந்துகளை டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. அதேபோல் கருக்கலைப்பு மாத்திரைகள் மகப்பேறு டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்தகங்கள் விற்க வேண்டும்.

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லா மல் கருக்கலைப்பு மாத்தி ரைகளை மருந்தகங்கள் விற்கக் கூடாது. மீறினால் மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருந்தகங்களில் டாக்டர்கள் பரிந்துரை அடிப்படையில் மருந்துகள் வாங்குபவர்களின் விவரங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் சுகாதா ரத்துறை இணை இயக்குனர் சந்திரா, துணை இயக்குனர் (குடும்பக்கட்டுப்பாடு) கவுரி, தனியார் மருந்தக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×